விஸ்வகுல சொந்தங்களுக்கு இனிய  வணக்கம்.. மீண்டும் சில தகவல்களுடன் மகேஷ் ஆச்சாரியா…

“தார்பூத்த குமுதபுயத்தார் முன்னூள் மார்பர், தனியநும விருது முடையோர் ,தருமெக்ஞ சீலர் மகுடத்பாகர் மாந்தை விஸ்தாரர் ,முகில் வாகனத் தோர் , சாஸ்திர வேதாகம சமர்த்தர் காயத்ரி ஜெப, சந்தி வந்தன விநோதர், சர்வஜக சிருஷ்டீ பிரதாபர் பஞ்சப்ரம்ம ,சந்ததி களான மேலோர்”…….

அர்த்தம் புரிந்து கொள்வது சற்று சிரமமே..

ஏனெனில் இந்த கவி பாடீயவர் முத்தமிழ் சக்கரவர்த்தி பழநி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்…. இவர் கவி பாடுவதிலும் வல்லவர்…கவிச்சிங்க நாவலர் கி.பி 1836 ம் ஆண்டு பிறந்து கி.பி 1884 ம் ஆண்டு மறைந்தார்.

காலத்தின் கோலத்தில் நமது சமுகத்துக்காக பாடுபட்ட நமது மக்களை தெரிந்து கொள்ள இயலாத நிலை… இன்றளவும் இவர் பெயரில் ஒரு தெருவின் பெயரும் அமைந்துள்ளது..மாம்பழக் கவிராயர் சந்து, தெற்கு ரத வீதி, பழநி. இவரின் வம்சாவழியான திரு . மாம்பழம் M.P. பாலசுப்பிரமணியன் இதே தெருவில் தான் வாழ்ந்து வருகிறார்.

இவரின் முயற்சியால் ” விஸ்வகுல பெருமை” என்ற புத்தகமும் வெளிவந்துள்ளது… இந்த புத்தகம் ” விஸ்வகர்ம ப்ராமண வம்ச ப்ரகாசிகை ” யின் தழுவலே.

அந்த புத்தகத்தின் முன் பக்க அட்டை படத்தையும் , காலஞ்சென்ற கவிச்சிங்க நாவலரின் படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்…

விஸ்வகர்மா குருப் ல் இருக்கும் நண்பர்கள் எவரேனும் பழநி பகுதியில் வாழ்பவராக இருப்பின் அவரின் கலை படைப்புகளை உலகத்துக்கு காட்ட முயற்சி செய்யுங்கள்..

நன்றி நண்பர்களே.. ஜெய் விஸ்வகர்மா..

Thanks With Regards

Mahesh Acharya

http://www.facebook.com/MaheshAchaarya