பஞ்ச மனுஷ்ய மூலவர்க்க ஞானம்- மலையாள புத்தகம்.

விஸ்வப்ராமணர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன் ப்ரம்ம ஸ்ரீ மகேஷ் ஆச்சார்யா

விராட் விஸ்வகா்ம பரப்ரம்மம் உலகத்தின் சா்வ மங்களத்திற்கும், காரணமாகி இருக்க வேண்டும் என்றே வேதங்கள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது.. அவ்வேதங்கள் ரிக் , யஜீர், சாம, அதர்வண வேதங்கள்  என்று மட்டுமே நிறைய மக்களுக்கு தெரிந்த விஷயம் . ஆனால் ஆச்சார்யர்களின் ஐந்தாவது வேதமான ‘ப்ரணவ வேதம்’ எனும் உன்னதமான வேதத்தை நமது மக்களிடம் மட்டுமல்ல , அனைத்து தரப்பு மக்களிடமும் மறைத்துவிட்டார்கள் என்பது தான்   உண்மை

pranava-veda

ப்ரணவ வேதங்கள் முறையே சப்த வேதா , கந்தர்வ வேதா , நாட்டிய வேதா , ஸ்தபத்ய வேதா என முறைப்படுத்தப்பட்டுள்ளது..சப்த வேதா என்பது செய்யுள், காவியம் போன்றவற்றை சொல்லுகிற வேதங்கள்.கந்தர்வ வேதம் என்பது  இசையை சொல்லுகிற வேதங்கள்.நாட்டிய வேதம் , நடனத்தை நெறிப்படுத்துகிற வேதங்கள்.ஸ்தபத்ய வேதா கட்டிடக்கலை அதாவது சாதரண மனிதன் வாழும் இல்லம் முதல் மன்னன் வாழும் கோட்டைகள், இறைவன் வாழும் கோவில், நகர நிர்மாண அமைப்பு  என அனைத்தையும் பற்றி சொல்லுகிற வேதங்களே ஸ்தபத்ய வேதம்…

 

 

ஒவ்வொரு வேதமும் ஒவ்வொரு விதமான தத்துவார்த்தங்கள் நிறைந்தவை. அந்த தத்துவார்த்தததில் இசையும் ஒரு வேதமே..ஆம்  கந்தர்வ வேதம் தான் இசை பரிமாணங்கள் ஒவ்வொரு விதத்தில் அமைகிறது.. சப்த ஸ்வரங்கள் , இறைவன் மனிதனுக்கு அளித்திருக்கும் மிகப்பெரிய கொடை.. இந்த ஸ்வரங்கள் ஒவ்வொரு இசை கருவிகளிலும் ஒவ்வொரு விதமான ஒலிப்ரவாகங்களை உருவாக்குகிறது..

வீணை  ::-

ஆம் கந்தர்வ வேதத்தின் மிகப்பெரிய பகுதி , ஏழு கம்பிகளில் இருந்து சப்த ஸ்வரங்கள் தெளிவாக பிறப்பெடுக்கிறது. ஒரு ஸ்வரத்திலிருந்து சப்த ஸ்வரங்கள் பிரிந்து வருவதுதான் இந்த சங்கீத சமுத்திரம் .வீணை ஒரு நரம்பு இசைக்கருவி.  இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.

வீணையின் பாகங்கள்

குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.

வீணையின் அமைப்பு::-

வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும்,மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும்.

 

வீணை  எப்படி உருவானது  , எவ்வாறு என்று இன்று வரை யாரும் சொன்னதில்லை அதற்கான ஆதாரங்களும் இல்லை, ஆதாரங்கள் இருந்தாலும் அதை பற்றி எழுதியவா்களின்  எந்த ஒரு விவரமும் தெரியவில்லை…ஆனால் வீணை என்பது கி.பி 17ம் நூற்றாண்டில் தான் உருவானது என்றும் , தஞ்சை பகுதியை பூா்வீகமாக கொண்டதாகவும் , இரகுநாத மன்னாரின் காலத்தில் தான் இது உருப்பெற்றதாகவும்  wikipedia முலம் அறிய முடிகிறது.. ஆகவே இதற்கு தஞ்சாவூா் வீணை என்றும், இரகுநாத வீணை என்றும் அழைக்கப்பெருகிறது… எது எப்படியாயினும் இது கம்மாளா்களின் கைத்திறன் பெற்றே முழுமைபெருகிறது என்பது தின்னமான உண்மை...

மேலும் எனக்கு கிடைத்த ஒரு மலையாள புத்தகத்தின் அடிப்படையில் சில தகவல்கள் கிடைத்துள்ளது.. அது வீணை செய்தவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நமது பழைய சாஸ்திரங்களை அலசி பார்த்தோம் என்றால் கேரளத்தில் உள்ள கிராமவாசிகளும் பண்டிதர்களும் , சொல்கின்ற ஒரு வார்த்தை விஸ்வகா்மாக்களே.. இதை ஏன் நான் இங்கே  தின்னமாக சொல்கிறேன் என்றால் வீணையை பற்றிய சாஸ்திரமும் , சங்கீத ஞானமும் இருந்தால் மட்டுமே இதனை நேர்த்தியாகவும், கலைவண்ணம் மிக்கதாக செய்ய முடியும்.வீணை செய்யும் மரங்கள் குறைந்தது 30முதல் 40  வருடங்களான பலா மரங்களில் அடிப்பாகத்தில் இருந்து தான் பெறப்படுகிறது.. ஸ்வரத்தை உருவாக்கும் உருக்கு கம்பிகள் விஸ்வப்ராமணா்களின் கையாள் செய்யும் உக்தி வேறு எவராலும் செய்ய முடியாத ஆச்சா்யமே..ஆனால் இன்று கம்பி செய்வதற்கான உருக்கு சாஸ்த்ரம் வேறு இனத்தாரிடம் சென்றுவிட்டதாகவும் அதில் ஒரு குறிப்புள்ளது..

வீணை பல பெயா்களில் இருக்கின்றது .

சிவனுடைய வீணை ‘ அனலம்பி’

கனங்களுடைய வீணை ‘ப்ரபாவதி’

விஸ்வவசு னுடைய வீணை ‘ப்ரகதி’

தம்பிரானுடைய வீணை ‘கலாவதி’

நாரதருடைய வீணை ‘மகதி’

சரஸ்வதினுடைய வீணை ‘ கச்சபி’ என்றும் அழைக்கப்படுகிறது..

வீணைகள் மூன்று விதமாக இருக்கிறது , அவையே தந்திர வீணை , யந்திர வீணை , மந்திர வீணை , இவை தவிர வேறு சில வகை வீணைகளும் உள்ளன .

 

மயூர ருத்ர வீணை

ருத்திரவீணை

சித்திரவீணை

அன்சவீணை

 

கேரளத்தின் ஒரு பழமொழிகளில் , “எட்டாம் பெண் தட்டான்குடியில்” என்று சொல்லுவார்கள்..எட்டாம் பெண் மட்டுமல்ல, எத்தனை பெண்கள் வந்தாலும் அனைவரும் கம்மாளா்களின் வீட்டுவாசலில் நின்றிருப்பர்..நகைகள் செய்வதற்கும், வீணைக்கான கம்பி வாங்குவதற்கும்…ஆனால் தொழில்நுட்பங்கள் மாறிவிட்டன. அதற்கான யுக்திகளும் மாறிப்போனது . வீணை வாசிப்பதற்கும் , அதற்கான திறமைகளை வளா்த்துகொள்வதற்கும் இன்றைய தலைமுறையிடம் ஆா்வம் குறைந்து கொண்டு வருகிறதாகவும் தகவல்கள் உள்ளன..

 

மேலும் காநாடகாவின் சிருங்கேரி பீடத்தில் மிகப்பெரிய வீணை ஒன்றும் உள்ளது  அதன் பெயர் சார்வபெளம வீணை…. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு 2003ல் மடத்திற்கு வழங்கப்பட்டது.சாதாரண வீணை 132 சென்டிமீட்டர் நீளமே இருக்கும். ஆனால் அங்குள்ள சார்வ பௌம வீணை 305 செ.மீ. நீளம் உடையது அதாவது சுமார் பத்து அடி நீளம் கொண்டது. அதன் அகலம் 76 சென்டிமீட்டர் உயரம் 74 சென்டிமீட்டர்.எடை 70 கிலோ! சாதாரண வீணையோ 10 கிலோதான். அருகில் நின்று பார்த்தால் நாம் தூக்க முடியுமா என்று திகைத்து நிற்போம். இதை 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாரதா பீடத்தில் கொண்டு வைத்தனர்.இந்த வீணை தாமரை வடிவ ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ளது, அதாவது நிற்கும்படி செய்யப்பட்டுள்ளது. ஒன்றின் மேல் சுவாமி விவேகாநந்தர் உருவமும் மற்றொன்றின் மீது ஒரு பொன்மொழியும் பொறிக்கப்பட்டுள்ளது.

நாம் ஒன்று சேருவது துவக்கம்

  நாம் ஒன்றாக நீடிப்பது முன்னேற்றம்

  நாம் ஒன்றாக வேலை செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்”

என்ற பொன்மொழி செதுக்கப்பட்டுள்ளது.இந்த மஹா சார்வ பௌம வீணை ஒரே மரக்கட்டையைக் குடைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட வீணை வேறு கிடையாது!இந்த வீணையின் குடம் முதலிய பகுதிகளில் சங்கீத மும்மூர்த்திகளின் படங்கள், பிள்ளையார், சரஸ்வதி, லெட்சுமி படங்கள், எந்தரோ மஹானுபாவுலு பாடலின் முதல் வ ரி ஆகியன செத்க்கபட்டு இருக்கிறது.கனகதாசர், புரந் தரதாசர், ராகவேந்திரர் ஆகியோர் படங்களுடன் இதை உருவாக்கிய சிவா மியூசிகல்ஸின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.சப்த ஸ்வரங்கள், அவற்றைக் குறிக்கும் ஏழு கடவுள்கள், 7 ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்தும் பிராணிகள் ஆகியனவும் வரையப்பட்டுள்ளன. வெறும் இசைக் கருவியாக நில்லாமல் ஒரு சங்கீத என்சைக்ளோபீடியாவாக இது திகழ்கிறது.வீணையின் கழுத்துப் பகுதியில் இதை உருவாக்கிய கர்நாடக கலாஸ்ரீ சின்னப்ப நடராஜர் பெயர், காந்திஜி, அசோகச் சக்கர உருவம் ஆகியனவும் உள்ளன. கண்ட பேரண்டம் எனப்படும் இருதலைப் பறவையும் இதை அலங்கரிக்கிறது.முனைப் பகுதியில் யாளியின் பட உருவமும் காணப்படுகிறது.கர்நாடக மாநில அசெம்பிளி, வீரர் கம்பகவுட, பொறியியல் வல்லுநர் விஸ்வேரையா ஆகியோர் திரு உருவங்களும் வீணையில் இடம் பெறுகின்றன.

SARVABHOWMA VEENA

Length – 305cm

Width (Kodam) – 76cm

Height (Kodam) – 74cm

Dimension (Kodam) – 225cm

Length of Dandi – 128cm

Frets – 12mm

Weight – 70Kg

Left Stand (Burude)

Height – 46cm

Dimension – 144cm

CONVENTIONAL VEENA

Length – 132cm

Width (Kodam) – 36cm

Height (Kodam) – 33cm

Dimension (Kodam) -115cm

Length of Dandi – 62cm

Frets – 6mm

Weight – 10Kg

Left Stand (Burude)

Height – 23cm

Dimension – 82cm

Veena Details are taken from Shiva Musicals site.

ஒரு கட்டிடம் உள்ளதென்றால் , அக்கட்டிடத்தின் மேல்புற வண்ணங்கள், சித்திரங்கள், அதன் வடிவமைப்பு என அனைத்தும் பார்ப்பவரின் கண்களை பளிச்சிட செய்யும் . ஆனால் அதன் அஸ்திவாரம் யாருக்கும் தெரிவதில்லை .. அதேபோல் பரந்துபட்ட இந்த சமுதாயத்தில் லோக ஷேமத்திற்காக உழைத்த விஸ்வப்ராமணா்கள் இன்று வரையிலும் யாருக்கும் தெரியாமல் போனது காலத்தின் கோலமே…

ஆதார நூல்::-

பஞ்ச மனுஷ்ய மூலவர்க்க ஞானம்- மலையாள புத்தகம்.

மேலும்  wikipedia ல் இருந்து கிடைத்த தகவல்களும்……

நன்றி நண்பர்களே. ஜெய் விஸ்வகர்மா…..

 

Thanks With Regards

BrahmaSri S.Mahesh Acharya B.E.,

Metal Sculptor & For community Research

+91 99765 27235

http://www.facebook.com\MaheshAcharya

Need More details about our community

http://www.maheshacharyablog.wordpress.com

சேலம் அருணாசலம் ஆச்சாரியா(VISWAKARMA)

விஸ்வப்ராமணர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களுடன் ப்ரம்மஸ்ரீ மகேஷ் ஆச்சார்யா…..

நமது முன்னோர்கள் தரமான இரும்பு , உருக்கு மற் பல்வேறு வகையான உலோக வேலைகளில் புகழ் பெற்றிருந்தனர்..

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக சேலம் , கோவை , மற்றும் திருச்சி மாவட்டங்களில் தரமான இரும்பு மற்றும் உருக்கு தயாரிக்கப்பட்டதாக வெளிநாட்டவர் குறிப்பிட்டுள்ளனர்..

சேலம் மாவட்டத்தில் கஞ்சமலை தொடர் சார்ந்த பகுதிகளில் இரும்புத்தாது கிடைக்கிறது ( காலங்கிநாத மகரிஷி இம்மலை தொடரையும் , சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை என்னும் கிராமத்தில் இவருடைய ஜீவசமாதி இருப்பதை பற்றியும் நான் விஸ்வகர்ம சித்தர்கள் என்னும் தொகுப்பில் பதிவிட்டிருப்பேன்.)

சேலம் மாவட்டத்தில் நாமகிரிபேட்டை கொல்லர்மேடு மற்றும் அரியாகவுண்டனூர் பட்டரைமேடு பகுதிகளில் ஏராளமான “கோளான் கட்டிகள்”  கிடைத்திருப்பதாக  ” விஸ்வகர்ம வரலாறு ” என்னும் புத்தகத்தின் மூலமாக அறிய முடிகிறது

கோளான் கட்டி என்பது மண்ணும் கல்லும் கலந்த இரும்பு மற்றும் உருக்கு கழிவுகளாகும்..இவற்றை பார்க்கும் போது எண்ணற்ற கொல்லர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த பெரும் தொழிற்கூடங்கள் இருந்திருக்கவேண்டுமென தெரிகிறது..

அந்த வகையில் இன்று நாம் காணப்போவது சேலம் “அருணாசலம் ஆச்சாரியார்” …

இவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றியவரின் மகன்..
வாள்கள், குத்தீட்டிகள் , வேல்கள் போன்ற வேட்டை கருவிகள் செய்வதில் அருணாசலம் ஆச்சாரியாரின் தொழிற்சாலை புகழ் பெற்றிருக்கிறது..
அவரது தொழிற்சாலையில் செய்யப்பட்ட கருவிகள் இந்தியாவில் இருந்த பிரிட்டிஷாரால் மிகவும் பாராட்டப்பட்டது…

1845 ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர் ஒருவர் ” நெசவுத்தொழிலை தவிர உருக்கு தயாரிப்பில் தென் இந்தியாவிலேயே சேலம் தான் பெயர் பெற்றிருக்கிறது. அழகான , தரமுள்ள வாட்கள் , வேல்கள் , ஈட்டிகள் போன்றவற்றை தயாரிப்பதில் சேலம் அருணாசலம் ஆச்சாரியாவுக்கு நிகர் யாருமில்லை என்று கூறியுள்ளார்..

1868 ம் ஆண்டு அருணாசலம் ஆச்சாரியா பிரிட்டிஷ் அரசி விக்டோரியா மகாராணிக்கு 2 மேஜை கத்திகளை பரிசாக கொடுத்ததாகவும் , அவை லண்டன் மாநகரிலுள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

1873 ம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற சர்வதேச நாடுகளின் கண்காட்சியில் அவரால் செய்யப்பட்ட உருக்கு சாமான்கள் பார்வைக்கு வைக்கபட்டிருந்தன

மேலும் சேலம் அருணாசலம் ஆச்சாரியா அவர்கள் வீடு இருக்கும் தெரு அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது..

இவை மட்டுமல்ல இன்னும் எண்ணற்ற தகவல்கள் புத்தகத்தில் இருப்பினும் தற்போதைய நிலை , இவரது வாரிசுகள் வாழும் நிலை என முழு தகவலும் தெரியாததால் புத்தகத்தில் இருக்கும் ஒரு பகுதி தகவலை மட்டுமே நான் உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்

தகவல் உதவி ::- சேலம் கொங்கு ஆய்வக நிறுவனர் அறிஞர் Dr. திரு B.  ராஜண்ணா M.A ,M.S, M.Phil, Ph.D அவர்கள் எழுதியிருக்கும் SALEM CYCLOPEDIA எனும் நூலில் விவரித்துள்ளார்.

நன்றி ::- விஸ்வகர்ம வரலாறு புத்தகம் ப்ரம்மஸ்ரீ வே. சண்முகம் ஆச்சாரியா
(Deputy Collector) Retd ,  சேலம்..

அடுத்த பதிவில் ” மேட் இன் போர்ட்டோ நோவா ”
மீண்டும் சந்திப்போம்..

நன்றி நண்பர்களே , ஜெய் விஸ்வகர்மா

Thanks With Regards
Mahesh Acharya
+91 94456 97235

+91 99765 27235
www.facebook.com/MaheshAchaarya

www.maheshacharyablog.wordpress.com

ஸ்ரீ ஆத்மமுத்ரா ப்ரம்ம ஸ்ரீ குருஜி பஞ்சமூர்த்தி ராஜேந்திரன் ஆச்சாரியா (Viswakarma)

ஓம் விராட் விஸ்வகர்ம பரப்ரம்மனே நமஹ

விஸ்வப்ராமணர்கள் அனைவருக்கும் இனிய வணக்கத்துடன் ப்ரம்ம ஸ்ரீ மகேஷ் ஆச்சாரியா..

பண்டைய காலங்கள் முதல் இன்று வரை கோவில்கள் எனப்படுவது மனித வாழ்க்கையில் இருந்து விலக்க முடியாத ஒரு உணர்வு…

கோவில்களும் , சுற்று பிரகாரங்களும் , கல் மண்டபங்களும் , அர்த்த மண்டபங்களும் , மூல கருவறைகளும் , மாபெரும் தூண்களும் அந்த தூணில் உள்ள சிற்பங்களும் ஏன் ? எதற்காக ?

இவை அனைத்தும் கலை சின்னங்களுக்காகவும் , அழகுக்காகவும் உருவாக்கப்பட்டது என்று நினைத்தால் அது தவறு.

ஒவ்வொரு சிற்பங்களும் நமக்கு உணர்த்தும் பாடங்கள் என்ன ?

எதனால் இந்த உருவங்களை காலத்தாலும் அழியா வண்ணம் கல்களில் செதுக்கியது ஏன் ?

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது …

சிற்பங்களையும் , அவற்றின் தத்துவங்களையும் , அர்த்தங்களையும் புரிந்து கொண்டால் மனித வாழ்வியலுக்கு தேவையான அனைத்தும் இங்கேயே கிடைத்து விடும் ..

ஆதிகாலத்தில் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதர்களுக்கு எந்த ஒரு வியாதியும் வந்ததில்லை.

இந்த காலத்திலும் கூட இயற்கையோடு ஒட்டி வாழ்கின்ற பறவைகளுக்கும் , விலங்கினங்களுக்கும் மனிதனை போல் பெருவாரியான துன்பம் அடைவதில்லை..

இன்றைய கால அவசர நிலை வாழ்க்கையில் இரவு, பகல் ஓய்வின்றி உழைக்கிறோம் . இந்த வாழ்க்கையில் நாம் சேமித்தது என்ன?

வியாதியும் , மன அமைதியின்மையும் , அளவுக்கு அதிகமான மன அழுத்தம் தான் மிச்சம்..

இரவு பகலாக ஓய்வின்றி உழைத்து சேமித்த பணத்தை பிற்பகுதியில் மருத்துவமனைக்கும் , நோய்களுக்குமே அதிகமாக செலவழிக்கிறோம்..

ஆனால் ஆதிகாலத்தில் வாழ்ந்தவர்கள் இயற்கை உணவுகளையும் , பக்தி மார்க்கத்தையும் , ஒழுக்க நெறிகளையும் கற்று கொடுத்துவிட்டு சென்றார்கள்…

இவை மட்டுமல்ல சாதாரணமாக ஒரு மனிதன் 120 வருட காலங்கள் உயிர் வாழ முடியும்.

இத்தனை வருடங்கள் ஒருவரால் உயிர் வாழ முடியுமா என்றால் அது சாத்தியமே..

மனிதன் தன் அறிவை உணர்ந்து முக்தி அறிவை தெரிந்து கொள்வதன் மூலமாக….
மனிதன் இதில் ஏழாவது அறிவில் தான் வருகிறான்..

மொத்தமாக 9 விதமான அறிவுகளும் , 5 விதமான மரணங்களும் வகைப்படுத்தபட்டுள்ளன..

அவைகள் முறையே

முதல் அறிவாக மரம், செடி , கொடிகளாகவும் , இரண்டாம் அறிவாக புழு, பூச்சிகள் உருவாகின்றன. மூன்றாம் அறிவாக உருவான புழுக்கள் அழியும் தருவாயில் வண்டாக பறக்கிறது.. நான்காம் அறிவாக பறவைகள் இனமாகவும் , ஐந்தாம் அறிவாக கால்நடைகள் , விலங்கினங்களாக மாற்றம் பெருகிறது. ஆறாம் அறிவாக தாவும் அறிவை பெறுகிறது. குரங்கினங்கள் முதலானவை. ஏழாம் அறிவாக மனித அறிவு தெளிவு பெறுகிறது.  எட்டாவது அறிவாக சித்த அறிவு கிடைக்கிறது. அஞ்ஞான வாழ்வை அறுத்து மெய்ஞான வாழ்வை தேடிச்செல்கிறது.

இதில் இறுதி அறிவாக உறுபெறுவதே ஒன்பதாம் அறிவு . ஆம் அதுவே முக்தி அறிவு . தன் உடல் மறந்து உடலை கூடாக்கி ஆத்ம சொருபத்தை மட்டும் ஒரே இடத்தில் நிலை நிறுத்தி உலக ஷேமத்துக்காக வாழ்கிறது..

அது எவ்வாறு உலக ஷேமத்துக்காக வாழ முடியும் ?
எனில் அதற்கான விடையே ” ஜீவ முக்தி அறிவு ”

அதாவது மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட மரணங்கள் ஐந்து விதமானவை . ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நிலைப்பாடானவை..

முதல் நிலை மரணம் என்பது ” தாழிநிலை ” என்பார்கள் . அதாவது தாழிப்பானையில் உடலை வைத்து விடுவார்கள் . உயிர் போன பிறகு அதனுடன் சேர்ந்து அனைத்து பொருட்களையும் சேர்த்து புதைத்து விடுவார்கள். இதனையே முதுமக்கள் தாழி என்றும் சொல்வார்கள்..

இரண்டாவது நிலை மரணம் என்பது சுடர் மரணம் என்பார்கள் . அதாவது சுடுகாட்டில் வைத்து உடலை முழுவதும் எரித்து விடுவது .

மூன்றாவது நிலை மரணம் என்பது இருள் நிலை மரணம் . அதாவது அகால மரணம் என்பார்கள். எதிர்பாராத விதமாக நடைபெறும் விபத்துகளினால் ஏற்படும் மரணம் ஆகும்

நான்காம் நிலை மரணம் என்பது அறை மரணம் எனப்படும் . அதாவது பெட்டியில் வைத்து புதைத்து விடும் பழக்கம் . உடலை விட்டு உயிர் நீங்கிய பிறகு பெட்டியில் வைத்து புதைக்கும் வழக்கம் அறை மரணம் எனப்படும்.

ஐந்தாவது நிலையே ஜீவமுக்தி அறிவு அல்லது மரணம் எனப்படும். அதாவது ஜீவசமாதி நிலை தத்துவம் . இந்த நிலை தான் உடலை கூடாக்கி ஆத்மா மட்டுமே நிலை சொரூபமாக அமைந்திருக்கும்.
யோகிகளும் , மகாஞானிகளும் , சித்த புருஷர்களும் ஏற்படுத்தி கொள்ளும் சமாதி நிலை . அவர்களை தான் நாம் இன்றளவிலும் வணங்கி கொண்டிருக்கிறோம்..

இவைகள் அனைத்துமே பஞ்சபூத சக்திகளினால் நடைபெறும் இயக்கமே..

மனிதனின் கருவறை முதல் கல்லரை வரையிலும் , பரந்த இந்த ப்ரபஞ்சம் முழுவதுமே பஞ்ச பூத சக்தியின் ஆதிக்கமே..

இவ்வாறு மனித அறிவுக்கும் , ஜீவமுக்தி அறிவுக்கும் இடைப்பட்ட தன்மையை உணர்ந்து தனக்கும் மேல் ஒரு ” அபரிமிதமான ஆற்றல்” இருப்பதை உணர்ந்தே பண்டைய காலங்களில் கோவில்களை எழுப்பினார்கள்..

ஒவ்வொரு மனிதனும் புறத்தூய்மையோடு அகத்தூய்மையும் ஒருங்கே அமையப்பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் அதை உணர்வுப்பூர்வமாக தெரிந்து கொள்வதற்கும் தான் கோவில்களில் சிற்ப வடிவங்களையும் , உருவங்களையும் வடிவமைத்து இருக்கிறோம்.

ஒவ்வொரு சிலை வடிவங்களும் ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான சக்தி.. அதனை இறைசக்தி என்றும் கூறலாம்.

இதனையே சற்று ஆழமான வார்த்தைகளாக சொல்ல வேண்டுமானால் ” முத்ரா” என்றும் கூறலாம்..

ஒவ்வொரு முத்ராவும் மனிதனின் உடலில் ஒவ்வொரு விதமான வியாதிகளை குணமாக்கும் சக்தி பெற்றவை..

இந்த முத்ரா பயிற்சியை பண்டைய காலங்களில் சிற்ப சாஸ்த்ர நிபுணர்களும் , ஸ்தபதிகளும் தன்னுள் ஆராய்ந்ததால் தான் அவர்களால் ஒவ்வொரு முத்ராக்களுக்குமான உருவத்தை மிகத் தெள்ளத்தெளிவாக கல் மண்டபங்களிலும் , தூண்களிலும் மூலகர்ப்ப க்ரகங்களிலும் வடித்து வைக்க முடிந்தது.

இப்போது உள்ளது போல் அனைத்து விதமான சமூக வலைதளங்கலும் , ஊடகங்களும் இல்லாத முற்காலத்தில் மக்கள் ஒன்றாக கூடும் இடமாகவும் , பக்தி நெறி வளர்க்கவும் , ஓழுக்க பண்புகளை கற்றுகொடுக்கவும் கோவில்களும் , இந்த சிற்ப சாஸ்த்ரங்களும் உதவின என்றால் அது மிகையாகாது..

இந்த” முத்ரா” பயிற்சி சம்பந்தமாக இத்துறையில் 30 வருடமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் சேலத்தை சார்ந்தIMG-20151121-WA0002

ப்ரம்ம ஸ்ரீ குருஜி பஞ்சமூர்த்தி ராஜேந்திரன் ஆச்சாரியா அவர்களிடம் நிகழ்த்திய கலந்துரையாடலின் போது கிடைத்த அரிய பொக்கிஷமான தகவல்களை இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..

முத்ரா பயிற்சியில் கிட்டதட்ட 1, 40, 000 முத்ராக்கள் மற்றும் அதற்கு மேலும் உள்ளன

உதாரணத்திற்கு ” வீரவஜ்ரமுத்ரா”  என்ற முத்ரா உள்ளது.. இது மனிதனின் சிறுநீரகங்களை நன்முறையில் செயல்படுத்த உதவும் முத்ரா

IMG-20151121-WA0000
இதில் சிறுநீரகம் பழுதடைந்துவிட்டாலும் இந்த பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் நமது சிறுநீரகத்தை சீர்படுத்திகொள்ள முடியும்.அடுத்ததாக” தேன்சிட்டு ”  என்ற முத்ரா உள்ளது . இது தேன்சிட்டு இரு இறக்கைகளையும் மிக வேகமாக அடிப்பது போல் உள்ளங்கையின் பத்து விரல்களையும் ( அதாவது மனதிற்குள் ” இத்தனை எண்ணிக்கை” என்ற அடிப்படையில் ,20 முதல் 30 வரை மனதிற்குள் எண்ண வேண்டும் ) அந்த எண்ணிக்கைக்குள் நமது உள்ளங்கையின் பத்து விரல்களும் மிக வேகமாக விரித்து மடக்கும் படி செய்ய வேண்டும்..
இவ்வாறு செய்வதனால் இரு கைகளின் இரு தசைகளும் , எலும்புகளும் பலப்படும்..

அடுத்த பயிற்சியானது வலது அல்லது இடது கைகளில் வலி ஏற்பட்டால் கைகளை மடக்கி உள்ளங்கையை வேகமாக விரித்து மடக்க வேண்டும் . இவ்வாறு செய்வதினால் கைகளில் உள்ள வலி நீங்கிவிடும்…இது தசை பிடிப்புக்கான எளிய முறை பயிற்சி

சில பேர் மார்பு பகுதிகளில் வலி அல்லது வாயு ப்ரச்சினை ஏற்படும் போது வலதுபுறம் அல்லது இடதுபுறம் மார்பு பகுதியை தேய்த்து விடுவார்கள். அதற்கான தீர்வு முத்ராவில்!!!!!!

வலதுபுறத்தில் காற்றுபிடி இருப்பின் இரு கைகளையும் மேல் பக்கமாக கூப்பியவாறு உடலையும் தலையையும் வலது பக்கமாக திரும்பி  மூச்சை இழுக்க வேண்டும்.. அப்போது வலது பக்க மூக்கு  துவாரத்தின் வழியாக காற்று உள் செல்வதை நம்மால் உணர முடியும்.

IMG-20151121-WA0001

அதேபோல் இடதுபுறத்தில் காற்றுபிடி இருப்பின் இரு கைகளையும் மேல் பக்கமாக கூப்பியவாறு உடலையும் தலையையும் இடது பக்கமாக திரும்பி  மூச்சை இழுக்க வேண்டும்.. அப்போது இடது பக்க மூக்கு  துவாரத்தின் வழியாக காற்று உள் செல்வதை நம்மால் உணர முடியும்.

இந்த முத்ராவினால்  வலது மற்றும் இடது மார்பகத்தின் உள்பகுதி சுத்தம் அடைகிறது . நுரையீரல் ,சுவாசக்கோளாறு போன்ற ப்ரச்சினைகள் குணமாகிறது. இந்த முத்ராவின் பெயர் ” திரிகோண முத்ரா”

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு முத்ராக்களையும் நான் செய்து பார்த்து உடலாலும் , உணர்வாலும் உணர்ந்ததினால் தான் என்னால் இதனை திண்ணமாக எழுத முடிகிறது..

இப்படி ஒவ்வொரு சிற்ப வடிவங்களிலும் நமது ஆரோக்கியத்தை நன்முறையில் பேணி காப்பதற்கான அனைத்து விஷயங்களும் ஆதாரபூர்வமாக நிலைநிறுத்திய இடமே கோவில்கள்..

தற்போது இந்த முத்ரா பயிற்சியை  நமது விஸ்வப்ராமண குலத்தை சார்ந்த ப்ரம்ம ஸ்ரீ குருஜி பஞ்சமூர்த்தி ராஜேந்திரன் ஆச்சாரியா அவர்கள் ” ஸ்ரீ ஆத்மமுத்ரா அறக்கட்டளை ” ஒன்றை துவக்கி முத்ராக்கள் பற்றியும் , அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறார்கள். பயிற்சி நேரங்கள்  காலை 5 மணி முதல் 7 மணி வரை . தினமும் பயிற்சி முடிந்தவுடன் இயற்கை உணவு ( காய்கறி, பழங்கள்) வழங்கப்படுகிறது..

இவர் தனது வாழ்நாளில் கிட்டதட்ட 840 முத்ராக்களையும் , அதன் பயன்களையும் தனது 30 வருட ஆராய்ச்சியில் ஒவ்வொரு சிற்பத்தின் வடிவங்களையும் உணர்ந்து அதன்முலம் ஜாதி , மத , இன பேதமில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கற்று கொடுக்கிறார்.

இவரால் பலனடைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பல ..

நமது சமுகத்தில் இவ் அரும்பெரும் காரியத்தை சப்தமில்லாமல் செய்து கொண்டிருக்கும் ப்ரம்ம ஸ்ரீ பஞ்சமூர்த்தி ராஜேந்திரன் ஆச்சாரியா அவர்களை இந்த உலகம் மிக விரைவாக பயன்படுத்தி கொண்டிருக்கிறது..

ஆனால் அனைத்து கலைகளையும் உருவாக்கி உலக மக்களுக்காக செய்து கொடுத்த நமது விஸ்வப்ராமணர்களுக்கு தெரியவில்லை என்பது தான் வேதனைக்கூரிய விஷயமும் கூட..

இந்த அரிய கலையான முத்ரா பயிற்சியை  வேறு யாரும் கற்று கொள்கிறார்களோ இல்லையோ சிற்ப கலை படைப்பை உருவாக்கிய நமது விஸ்வப்ராமணர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் குருஜி பஞ்சமூர்த்தி ராஜேந்திரன் ஆச்சாரியா அவர்களின் பேராவலும், எண்ணமும் கூட

எனவே நமது விஸ்வப்ராமணர
குலமும் பரிபூரணமாக முத்ராக்கள் அனைத்தையும் உணர்ந்து நோய் நொடி இல்லா ஒரு புத்துணர்வான வாழ்வை வாழவேண்டும்…

தற்போது இந்த ஆத்மமுத்ரா அறக்கட்டளை மூலமாக முத்ரா பயிற்சியினை படித்துணர்ந்து பயன்பெற்ற பயனாளிகள் இணைந்து ஆத்மலிங்க திருக்கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஆத்ம லிங்கமானது பண்டைய கால சிற்ப சாஸ்திர
விதிப்படி ஆண்கல், பெண்கல், அலிக்கல் இவைகளை தேர்ந்தெடுத்து முறையே ப்ரம்மபாகம் , விஷ்ணுபாகம் , ருத்ரபாகம் என சமபாகமாக பிரித்து 9 அடி உயரத்தில் பானமும் , 4 1/2  அடி உயரமும் , 36 அடி விட்டமும் கொண்ட ஆவுடையும் , 3/4 அடி உயரத்தில் ஆதார பீடமும் தீர்த்த நாளமும் பூமியை நோக்கிய அமைப்பில் அமையப்பெற்று” ஆத்மலிங்கம்”  பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது..

அமைவிடம் ::- 217, வீராணம் மெயின் ரோடு , லட்சுமி நரசிம்மர் கோயில் எதிரில் , சின்னம்மாபேட்டை, சேலம் – 636003 …
Mail – sriaathmamuthraa@gmail.com
Website-
Www.sriaathmamuthraa.org

நன்றி நண்பர்களே, ஜெய் விஸ்வகர்மா

Thanks with Regards
Mahesh Acharya

www.facebook.com/MaheshAchaarya
maheshachaarya@gmail.com
www.maheshacharyablog.wordpress.com

Aside

பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் கருடர்முக்கு ( Viswakarma)

விஸ்வப்ராமணர்கள் அனைவருக்கும் இனிய வணக்கத்துடன் ப்ரம்மஸ்ரீ மகேஷ் ஆச்சாரியா.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில கோவில்களையும் , அதனுடன் தொடர்பான நமது விஸ்வகர்மாக்களின் கதைகளையும் இனி வரும் சில பதிவுகளில் காண்போம்.

பறக்கை என்ற ஊர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் , இராஜக்கமங்கலம் பேருராட்சி அடங்கியது. இது நாகர்கோவிலில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் 7கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் அமைந்துள்ளது.
இவ்வூரின் மூன்று பக்கங்களிலும் பரந்து கிடக்கின்ற நீர்நிலைகளும் , வயல்களும் இவ்வூருக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியதன் விளைவே இது சதுர்வேதி மங்கலம் கிராமமாக ஆகியிருக்கிறது…

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள குகநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு முதலாம் ராஜராஜனின் (995-1014) மணக்குடி ஊரில் இருந்து உப்பை சுசீந்திரம் கோவிலுக்கு நீர் வழியாக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பதை 11 ம் நூற்றாண்டு கல்வெட்டு கூறும்.

சுசீந்திரம் ஊருக்கும் பறக்கைக்கும் நீர்வழித்தொடர்பும் , போக்குவரத்தும் இருந்ததை மன்னர் மார்த்தாண்டவர்மா (1729-1758) கால சுசீந்திரம் ஊர் வரைபடம் உணர்த்தும்..

பறக்கை ஊரின் பழமை 1200 ஆண்டுகள் வரை செல்கிறது. இவ்வூர் முற்காலத்தில் பாண்டியர் , பிற்காலச்சோழர் , வேணாடு அரசர்கள் , திருவிதாங்கூர் சமஸ்தான அரசர்கள் ஆகியோர் ஆட்சியின் கீழ் அடங்கியிருந்திருக்கிறது..

பறக்கை கோவிலின் சிற்பங்களை வடித்த ” கோட்டாறு கொம்மண்டை நயினான் முதலி” என்ற சிற்பிக்கு இந்த ஊர் பெருமக்கள் நிலம் விட்டுகொடுத்தனர் என்றும் ஊர் கூட்டம் போட்டு அச்சிற்பியின் கோவில் உரிமையை பறை சாற்றியதும் ஆகிய செய்திகளை 1544 ம் ஆண்டு கல்வெட்டு கூறுகிறது..

ஊர்பெயர் குறித்த பொதுவான கருத்தாக்கத்தின் படி மூன்று நிலைகளில் மாற்றமடையும் தன்மை ஆகிறது..
1) ஊர் வாய்மொழிக்கதைகள்
2) தலபுராணச்செய்திகள் தொடர்பாக இருத்தல்
3) ஆட்சியாளர்களின் செல்வாக்கால் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு நிரந்தரமாக வழங்கப்படுதல்

இதை பறக்கை ஊருக்கும் பொருந்திகாட்டமுடியும்..

வாய் மொழி வழக்காறுகளிலும் , சுசீந்திரம் கன்னியாகுமரி தலபுராணச்செய்திகளிலும் பட்சிராஜபுரம், வேதவனம் , வில்வவனம் என்றும் கல்வெட்டுக்களில் ப்ரம்மதேய கிழார் மங்கலம் , கிழார்மங்கலம் அபிதானமேரு சதுர்வேதி மங்கலம் என்றும் அரசு அங்கிகாரம் பெற்ற ஆவணங்களில் பறக்கை என்றும் பெயர் பெற்றுள்ளது..

பட்சிராஜன் என்ற வடமொழிபெயர் கருடனை குறிப்பது . பட்ஷிராஜனை தமிழில் பறவைக்கு அரசன் என்று கூறலாம்.கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுக்களில் , கரியமாணிக்கபுரம் கோவில் கல்வெட்டு மட்டும் பறவைக்கு அரசு என்ற சொல்லை குறிக்கிறது. எனவே மிகப்பழைய பெயரான பட்ஷிராஜபுரம் , தமிழில் பறவைக்கரசன் என்று ஆகி பறவைக்கரசூர் என்று மாறி பறக்கை என ஆகியிருக்கலாம்..
பறவைக்கரசு என்ற பெயர் .
” இராஜநாராயண சதுர்வேதி மங்கலம்” என அழைக்கப்படும் கரியமாணிக்கபுரம் ( கோட்டாறு) விண்ணகர ஆழ்வாரின் கோவிலில் உள்ள கி.பி 1411 ம் ஆண்டு கல்வெட்டு பறவைக்கரசு என்ற பெயரை குறிப்பிடுகிறது.

பறக்கை மதுசூதனர் கோவில் கல்வெட்டுகளிலும் , ஓலை ஆவணங்களிலும் , வாய்மொழி மரபிலும் கோவில் எழுத்து சான்றுகளிலும் மதுசூதனப்பெருமாள் கோவில் என்று வழங்கப்பெறுகிறது..

மது என்ற அரக்கனை விஷ்ணு வதம் செய்ததால் அவர் மதுசூதனன் என்ற பெயரும் பெற்றார் என்று பாகவதம் கூறுகிறது

1446442349096

எது எப்படி பெயர் பெற்றாலும் ஒரு கோவில் என்ற ஒன்று உருவானால் அங்கே விஸ்வப்ராமணர்கள் இல்லாமல் இல்லை..

ஆம்!!
நான் (மகேஷ் ஆச்சாரியா) நேரடியாக கேட்டறிந்த சில விஷயங்களில் இவ்வூர் உருவானதற்கு சில வாய்மொழி கதைகள் இன்றளவிலும் இங்கே பேசப்பட்டு வருகிறது.. இதே கதை தான் எனக்கு கிடைத்த புத்தகத்திலும் உள்ளது..

இதோ அந்த வாய்மொழி கதை ::-
காஞ்சிபுரம் எனும் ஊரில் வாழ்ந்த சிற்பி ஒருவன் கருடனின் உருவத்தை செய்து கொண்டிருந்தார். தத்ருபமாக அமைந்த அச்சிலையை பார்த்த பிறகு அதை உருவாக்க பணித்த அரசனிடம் தர விருப்பமில்லை. அந்த சிலை தர முடியாது என சொல்லவும் முடியாது . சிற்பி அதை தன்னிடம் வைத்து கொள்ள விரும்பினார். அதனால் அக்கருடன் சிலையின் சிறகில் உளியால் தட்டி குறைபடுத்தினான். குறைபாடுடைய சிற்பத்தை அரசன் விரும்பமாட்டான் என்பது அச்சிற்பியின் திண்ணம்.

ஆனால் சிற்பி நினைத்தது நடக்கவில்லை. குறைபாடுடைய கருடன் உருவம் வானில் பறந்தது. காஞ்சிபுரம் விட்டு தெற்கு நோக்கி வந்தது. மதுசூதனன் கோவில் கொண்டிருந்த ஊருக்கு வந்தது. பலநாள் களைப்பால் சோர்ந்து போன கருடன் ஒரு புன்னை மரத்தில் அமர்ந்தது. தண்ணீர் அருந்த வேண்டும் என ஆவலாய் பார்த்தது . அருகே ஒரு குளம் இருந்தது. “கண்டேன் குளம்” எனக் கூவியது .

மதுசூதனன் கோவில் கொண்ட இடத்தை அடையாளம் கண்டு அங்கே அமர்ந்து கருடன் வணங்கியது. பறவைக்கு அரசன் குடியேறிய இடம் பறக்கை ஆனது .
இப்படி ஒரு கதை பறக்கையில் வழங்குகிறது..

இது எனது நேரடி களஆய்வில் கிடைக்கப்பெற்ற தகவலும் கூட. இது வாய்மொழி கதையாக இருப்பினும் 1200 வருடங்களாக இன்றளவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு தகவலும் கூட..

ஆனால் சிவஞானமுனிவராலும் , கச்சியப்ப சிவாச்சாரியாராலும் இயற்றப்பட்ட காஞ்சிபுரம் தலபுராணச்செய்திகளிலும் , பறக்கை தொடர்பான தலபுரானநூல்களிலும் இக்கதை இல்லை. கல்வெட்டுகளிலும் பறக்கை தொடர்பான வேறு கதைகளும் பாடல்களிலும் இல்லை.. பறக்கை மதுசூதன பெருமாள் கோயில் தலபுராணச்செய்திகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிலை என்பது பேசும் தன்மை கொண்டது. அதனால தான் தமது உள் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக கோவில்களை அமைத்தனர்..

1200 ஆண்டுகாலமாக பழமையுடன் போற்றிபுகழப்டும் இக்கோவிலில் இன்றளவிலும் கருடனுக்கு தனிச்சன்னதியும் , இங்கே நடைபெறும் பங்குனி மாத தேரோட்ட திருவிழாவின் ஐந்தாவது நாள் திருவிழாவில் “கருடனுக்கு கண் திறக்கும்” வைபவம் கோவில் கொடிமரத்திற்கு அருகில் வைத்து நமது விஸ்வப்ராமணர்கள் தான் கண்திறப்பார்கள் .பின்பு மதுசூதன பெருமாள் உற்சவர் சிலை இந்த கருடர் மீது ஏற்றி வைத்து கட்டப்பட்டு பிறகு சுவாமி புறப்பாடுநடைபெறும். பிறகு கோவிலின் பின்புற மதில் சுவரில் “கருடர்முக்கு” என்னும் சிற்பத்தின் கீழ் பகுதியில் வந்த பிறகு அக்கருடனையும் , மதுசூதனபெருமாளையும் வணங்கி அவ்விடத்தில் தேங்காய் உடைப்பார்கள்.. இது இன்றளவிலும் நடந்து கொண்டிருக்கும் திருவிழாவும் கூட……1446442399289

கல்வெட்டுகள் கூறும் இம்மன்னர்கள் அனைவரும் ஒருகாலத்தில் இம்மண்னை ஆண்டவர்கள் ::-

1) பாண்டியன் சடையன் கி.பி 10 நூற்றாண்டு
2) ஸ்ரீவல்லபன் கி.பி 12 ம் நூற்றாண்டு
3) வீர ரவிவர்மா கி.பி 14 ம் நூற்றாண்டு
4) வீரகேரள வர்மன் கி.பி 16 ம் நூற்றாண்டு
5) பூதலவீர ராமவர்மா கிபி 15 ம் நூற்றாண்டு..

இன்னும் சொல்லப்போனால் நாகர்கோவில் வடசேரி கிராமத்தில் அமைந்திருக்கும் சோழராஜா திருக்கோவில் சோழ மன்னனின் மாபெரும் தரைப்படை இருந்த இடம் . அதன் பெயராலேயே இந்த சிவாலயத்துக்கு சோழராஜா திருக்கோவில் என்ற பெயர் அமைந்தது. மேலும் இவ்வூர் கேரள சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த போது வடசேரி , கிருஷ்ணன் கோவில் பகுதியை ஆதித்யவர்ம சதுர்வேதி மங்கலம் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் ஊரை பற்றிய தகவலுகளும், கோவிலை பற்றிய தகவல்களும் நிறைய உள்ளன. கோவில் குளத்தின் அக்கரையில்( ஊருக்கு ஒதுக்குபுரமான இடத்தில்) வலிகொலிஅம்மன் என்னும் ஒரு அம்மன் கோவிலும் , ஒரு பழைய கால சிவன் கோவிலும் உள்ளது..

வலிகொலிஅம்மன் என்னும் கோவிலின் கதை இன்னும் சுவாரஸ்யமானது . அதனை அடுத்த பதிவினில் காணலாம்..

இந்த தகவல்கள் அனைத்தும் ” பறக்கை மதுசூதன பெருமாள் ” எனும் புத்தகத்தின் வாயிலாக கிடைக்கப்பெற்றது. இப்புத்தகத்தை எழுதியவர் முனைவர் அ.கா பெருமாள் அவர்கள்..

இன்னும் தகவல்கள் நிறைய இருப்பினும் நான் நமது விஸ்வப்ராமணர்கள் தொடர்பான தகவல்களை மட்டுமே கொடுத்துள்ளேன்..

தகவல்கள் உதவி ::- பறக்கை மதுசூதன பெருமாள் எனும் புத்தகத்திலிருந்து

நன்றி முனைவர் அ.கா பெருமாள் அவர்கள்..

நன்றி நண்பர்களே, ஜெய் விஸ்வகர்மா

Thanks with Regards
Mahesh Acharya

http://www.facebook.com/MaheshAchaarya

Need more details about our community, pls visit my blog:-

http://www.maheshacharyablog.wordpress.com.

சிற்ப கலை மற்றும் கட்டிடகலை வல்லுநர்கள் Part 2 (VISWAKARMA)

விஸ்வப்ராமணர்கள் அனைவருக்கும் இனிய வணக்கத்துடன் ப்ரம்ம ஸ்ரீ மகேஷ் ஆச்சாரியா

சிற்ப கலை மற்றும் கட்டிடக்கலை வல்லுநர்கள்

சென்ற வார தொடர்ச்சி:-

மேலை நாட்டவரை கவர்ந்திலுக்கும் சுற்றுலா தலமான மகாபலிபுரம் குடவரைகோயில்களை கட்டிய வல்லுநர்கள் பெயர் விபரம்

1) கேவாத பெருந்தச்சன்

2) குணமல்லன்

3) பையமிழிப்பன்

4) சாத்தமுக்யம்

5) கலியானி

6) திருவொற்றியூர் அபாஜர்

7) கொல்லன் சமயன்

ஆகிய சிற்பிகள் ஆகும்

நன்றி ::-” தமிழர் வளர்த்த அழகு கலைகள்” – மயிலை பேராசிரியர் திரு . சீனி வெங்கடசாமி அவர்கள்

Mr. தண்டி எனும் ஆராய்ச்சியாளர் 8 ம் நூற்றாண்டில் மாமல்லையில் இருந்த சில்பி லலிதாலயன் என்பவர் ” சூத்ரக சரிதம்” எனும் நூலை எழுதியதாக குறிப்பிட்டுள்ளார் .

சிற்ப அரசன் லலிதாலயன் ::-

கி.பி 7 ம் நூற்றாண்டில் இருந்த நரசிங்கப்போத்தரையன் எனும் பல்லவ சக்ரவர்த்தியின் காலத்தில் லலிதாலயன் என்பவர் ஆஸ்தான சிற்பியாக இருந்தார். இவர் சூத்ரக சரிதம் எனும் நூலையும் எழுதியுள்ளார்.

அப்போது தலசயனம் என்ற ஆலயத்தில் பாம்பணை மசூது பள்ளி கொண்ட பெருமானின் ஒரு கரம் உடைந்து விட்டது. அதனை லலிதாலயன் செப்பனிட்டு சரிபடுத்தினார்.

செப்பனிட்ட கரம் எதுவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

லலிதாலயன் என்கிற சிற்பி

தலசயனப் (ஜலசயனம்)பெருமாளின் கை ஒன்றை செப்பனிட்டதையும் அதை மன்னன் ”எந்தக் கையை சீர் செய்தீர்கள்…” என்று கேட்கும் போது

“இதுவே எனக்கு வெற்றி…” என்றானாம்.

அவர் திறமையை பாராட்டி அரசன் ” சிற்ப அரசன் லலிதாலயன்” எனப் பட்டம் வழங்கி தனக்கு சமமாக ஆசனம் அளித்து கெளரவித்தான் ..

அரசனுக்கு நிகராக நமது சிற்பியார்களுக்கும் சிற்ப அரசன் என்கிற பட்டம்

எப்பேற்பட்ட பெரும் பாக்கியம் .

யூகித்து பாருங்கள் நமது சிற்பிகளின் கலைத்திறனை …..

இத்தகவலை நான் type செய்துகொண்டிருந்த போது மற்றொரு இணையதளத்தில் இருந்து திரு முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் “மாமல்லபுரம் ஜலசயன தேவர் கோயிலை” பற்றி எழுதிய தொகுப்புகள் எனக்கு கிடைத்தது.. அதை பற்றிய தகவல் தொகுப்புகள் அடுத்த பதிவில் !!!!!!!!!!!

தகவல்கள் அடுத்த வாரம் தொடரும் ………

நன்றி நண்பர்களே, ஜெய் விஸ்வகர்மா

Thanks with Regards

Mahesh Acharya

http://www.facebook.com/MaheshAchaarya

Visit My blog ::- http://www.maheshacharyablog.wordpress.com

சிற்ப கலை மற்றும் கட்டிடகலை வல்லுநர்கள் part1 (VISWAKARMA)

விஸ்வப்ராமணர்கள் அனைவருக்கும் இனிய வணக்கத்துடன் ப்ரம்ம ஸ்ரீ மகேஷ் ஆச்சாரியா…

இந்தியாவின் மாபெரும் சிற்ப கலைகளையும், மிகப் பழமையான சிந்து சமவெளி நாகரீகங்களையும் , கலாச்சாரங்களையும், வாஸ்து நிபுணதுவத்தையும் உலக மக்கள் ஷேமத்துக்காக உருவாக்கி கொடுத்து , அவர்களுடன் பயணப்பட்டு இன்றளவிலும் இயங்கி கொண்டிருக்கும் ஓர் உன்னத சமூகம் விஸ்வகர்ம செழுமரபினர் வம்சம் என்றால் அது மிகையாகாது…..

வருடத்திற்கு மட்டும் 6 கோடி அன்னிய நாட்டினர் நமது நாட்டிற்கு வருகிறார்கள்.இவர்களால் நமது நாட்டிற்கு கிடைக்கும் அதிகபடியான அந்நிய வருமானங்கள் கணக்கிலற்றது. அதிலும் மிகவும் குறிப்பாக அதிக அளவில் இவர்கள் பயணப்படும் இடங்கள் என்று பார்த்தோமேயானால் அனைத்தும் கோவிலுகளும் , அதனை ஒட்டிய சிற்ப சாஸ்திரங்களுமே. புடைப்பு சிற்பங்கள், சுதை வடிவ சிற்பங்கள் , எல்லோரா குகை ஓவியங்கள் , பல்லவர் கால சிற்பக்கலைகள் என அனைத்தும் நமது சிற்பிகளாலும் , ஸ்தபதிகளாலும் ஒருங்கே அமையப்பெற்றதே இவர்களின் வருகைக்கு காரணம் .

சிற்பிகளின் அதீத கற்பனை திறனும் இதற்கு உதாரணமாக கூறலாம்…

அன்றைய காலத்தில் எந்த ஒரு சமூக ஊடகங்களோ , இணையதள வசதியோ எதுவும் கிடையாது.

அதுமட்டுமல்லாது ஒரு கோவிலை நிர்மானம் செய்யும் சிற்பிக்கும் , ஸ்தபதிகளுக்கும் தங்களின் வேலை மட்டுமே குறிக்கோளாக இருந்தமையால் இவர்கள் தங்களது பெயரை எங்கேயும் காட்டுவதற்கு நேரமில்லை. அப்படி இவர்கள் பெயரை குறிப்பிட்டுருந்தாலும் சில சூட்சும ரகசியங்களுடனே பெயரை நிலைப்படுத்தி இருந்தனர்…

காலப்போக்கில் அந்நியர்களின் படையெடுப்புகளால் எண்ணற்ற கோவில்களும் அழிந்தன. அதனுடன் அந்த கோவிலை நிர்மாணித்த ஸ்தபதிகளின் பெயர்களும் சேர்ந்து அழிக்கப்பட்டன..

இன்னும் சொல்லப்போனால்

” பேஷ்வாக்கள் ” எனப்படும் ஒரு இனத்தவர்கள் மன்னர்களாக அரசாண்ட காலத்தில் நம்மை மிகவும் பாதிப்புள்ளாக்கி உள்ளனர் என்பதை வேறு சில ஊடகங்களின் மூலமாக அறிய முடிகிறது.

ருவரி மலித்தம்மா எனும் மாபெரும் சிற்ப கலைஞர் தமது பெயரை “மா” அல்லது ” மல்லி” என்றே குறிப்பிட்டிருப்பார்..

ஆனால் இம் மாபெரும் சிற்ப கலைஞர்கள் இன்று இல்லாமல் போனாலும் இவர்கள் ஸ்தாபித்த சிற்ப கலைகள் இன்றளவிலும் அழியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை..

அந்த வகையிலே தற்போது நாம் காணப்போவது வரலாற்றில் தம் கால்தடங்களை பதித்த சில ஸ்தபதிகளையும், சிற்பிகளையும் அவர்களை பற்றிய அடியொற்றிய குறிப்புகளையும் இனி வரும் வாரங்களில் காணலாம்…

முதலாம் குலோத்துங்க சோழன் , மகாதேவர் கோயிலைக் கட்டிய சிற்பி சந்திரசேகரன் ரவி என்பவருக்கு “சோழேந்திர சிம்ம ஆச்சாரி “எனப் பட்டமளித்தார்.

திருவொற்றியூர் கோயிலை புதுப்பித்தவர் வீரசோழ தச்சன் எனப்படும் ராஜேந்திர சோழன் ரவி எனும் சிற்பியாகும்..

விருத்தகிரி கேசவ பெருமாள் , அவரது மகன் விஸ்வமுத்து , திருப்பிறை கோடை ஆச்சாரி திருமருங்கன் , அவரது தம்பி கரனாச்சாரி ஆகியோர் சிதம்பரம் கோயிலின் வடக்கு கோபுரத்தை கட்டியதாக உட்புற சுவரில் காணப்படுகிறது..

11 வது நூற்றாண்டில் , ராஜேந்திர சோழன் என்பவர் கோவை பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலை கட்டுவித்தார்..

இதன் சபா மண்டபம் 94 க்கு 38 அளவுள்ளது . 16 அடி உயரமுள்ள 36 தூண்கள் உள்ளன. இவை கம்மன் ஆச்சாரி என்பவரது கைவண்ணத்தில் உருவானவை…

மற்ற சிற்பிகளை பற்றிய தகவல்களுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் …….

தொடரும்

நன்றி நண்பர்களே, ஜெய் விஸ்வகர்மா…

Thanks with Regards

Mahesh Acharya

http://www.facebook.com/MaheshAchaarya

Need more details about our community , visit my Blog

http://www.maheshacharyablog.wordpress.com…

ப்ரம்ம ஸ்ரீ கியானி ஜைல்சிங் ஆச்சார்யா(Viswakarma)

விஸ்வப்ராமணர்கள் அனைவருக்கும் இனிய  வணக்கத்துடன் மகேஷ் ஆச்சாரியா…………..

நமது விஸ்வகர்ம சமுதாயம் எல்லா கலைகளிலும் வல்லவர் மட்டுமல்ல . நாட்டை ஆளும் திறனும் படைத்தவர் என்பதை நிருபித்து காட்டிஇரூக்கிறார்கள்… அந்த வகையில் இன்று நாம் காணப்போவது.இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ப்ரம்ம ஸ்ரீ கியானி ஜைல்சிங் ஆச்சார்யா……..

இவரை பற்றிய முழுமையான தொகுப்புகள்  புத்தகமாகவே உள்ளது. ……

அதனால் முடிந்த அளவு இவரை பற்றி சுருக்கமாக கூறுகிறேன்…. ……

IMG_20150426_181246

பஞ்சாப் மாநிலத்தில் பரீத்கோட் சமஸ்தானத்தில் தச்சு தொழில் செய்யும் பாரம்பரியமிக்க விஸ்வகர்ம ப்ராமண பரம்பரையில் 1916ம் ஆண்டு மே மாதம் 5 ம் நாள் பிறந்தவர். இவரது இயர்பெயர் ஜார் ஜைல் சிங்.. ……

இவர் கல்வி பயின்றது அமிர்தசரஸ் ல் உள்ள சீக்கிய மெஷினரி கல்லூரி யில்…. படிக்கும் காலம் நன்றாக திறமையுடன் பயின்றதால் இவருக்கு கியானி( ஞானி) என்னும் பட்டத்துடன் பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்வி பட்டத்தையும் பெற்றார்.. …..

வித்யாசாகர் என்னும் சிறப்பு பெயரும் தாய்மொழி இலக்கியத்திற்காக கிடைக்க பெற்ற அரும்பெரும் சாதனையாளர்….  ஜவஹர்லால் நேரு , அபுல்கலாம் ஆசாத் , சர்தார் வல்லப பாய் படேல் போன்ற பெருந்தலைவர்களுடன் சுதந்திரத்திற்காக போராடி பல முறை சிறைச்சாலை சென்றவர்…….

1972ம் ஆண்டில் பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்று விவசாயம், கல்வி, தொழில்துறை, பொருளாதாரம் முதலிய துறைகளில் நமது நாட்டிலேயே முதலாவது மாநிலமாக கொண்டு வந்தார். ………

பின்னர் பாரத நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தவர். …..

பிறகு 1982ம் ஆண்டு நமது நாட்டிலேயே மிக உயர்ந்த பதவியான இந்திய ஜனாதிபதி யாக அமர்த்தப்பட்டார். கறைபடாத அரசியல்வாதியாவகவும் , எளிமையுடனும் , இறை உணர்வுடனும் இனப்பற்றுமிக்கவராகவும் வாழ்ந்தவர்……

சென்னை, பெங்களூர், கான்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகில பாரதிய விஸ்வகர்ம மகாசபையின் மாநாடுகளில் கலந்துகொண்டு சமுக எழுச்சியை ஏற்படுத்தியவர் என்று சொன்னால் அது மிகையாகாது..இறுதியாக இவர் 1994 ம் வருடம் டிசம்பர் மாதம் 25 ம் நாள் விண்ணுலக வாழ்க்கைஎய்தினார்.  மாமனிதரின் படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்…..

நன்றி நண்பர்களே. ஜெய் விஸ்வகர்மா

Thanks With Regards

Mahesh Acharya

http://www.facebook.com/MaheshAchaarya

http://www.maheshacharyablog.wordpress.com

விஸ்வகர்ம ஹனுமத்வஜம்(Viswakarma)

விஸ்வப்ராமணர்கள் அனைவருக்கும் இனிய  வணக்கத்துடன் ப்ரம்ம ஸ்ரீ மகேஷ் ஆச்சார்யா….

விஸ்வகர்மாவின் ஐவர்ணக்கொடியில் ஹனுமன் இடம் பெற்றதை குறித்த ஸ்காந்த புராணம், நாகரகாண்டம் , விஸ்வகர்மோபாக்யாயனம் 11வது அத்தியாயத்தில் விவரமாக கூறப்பட்டுள்ளது . அதாவது திரேதாயுகத்தில் சில மகரிஷிகள் முருகக்கடவுளை  வணங்கி தேவ சிரேஷ்டராகிய ஸ்ரீ விஸ்வகர்மாவுக்கு ஹனுமக்கொடி எவ்வாறு அமைந்தது என்று கேட்கவும் , முருககடவுள் அதை பற்றி விளக்கமாக கூறலானார்…

ப்ரம்ம ரிஷி கெளதமர் – அகல்கையின் புத்திரியான அஞ்சனாதேவியை வாயுதேவன் மணந்து கொண்டார் . இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் வாயுபுத்திரன் ஹனுமன். இவர் சிசுவாக இருந்து பின் விஸ்வகர்மாவின் ஆசியுடன் தங்க கோமனத்துடனும் (கெளபீனம்) தங்க பூணூலுடனும்(யக்ஞோபவீதம்) தாயின் யோனியில் சிசுவின் ஆண்குறி படாமல் பிறந்தவர் என அனைத்தும்( நீங்கள் அறிந்ததே)நான் ஏற்கனவே பதிவு செய்திருப்பேன்..

ஆனால் விஸ்வகர்மர்களுக்கு ஹனுமத்வஜம் உண்டென்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

இராமாயணத்தில் ஒரு நிகழ்ச்சி. அதாவது ஸ்ரீ ராமபிரான் இலங்கைக்கு செல்ல கடலை தாண்ட ஒரு பாலம் கட்டி தந்தது நளவிஸ்வகர்மாவாகும் . இதற்காக மலைகளை ஹனுமன் பெயர்த்து வந்து விஸ்வகர்மாவிடம் கொடுக்க அவர் அவற்றை இடது கையால் வாங்கி அணைகட்டில் அமைத்தார். இந்த செய்கையால் எரிச்சலுற்ற ஹனுமன் ஸ்ரீ ராமபிரானிடம் முறையிட ஸ்ரீ இராமர் இருவரையும் சமாதானப்படுத்தினார்..

400px-Rama_and_monkey_chiefs

இதை குறித்த ஒரு  புராண பாடலை பார்ப்போம் ::-
” உலகம் புரந்ததுன்னால் , ஊரும் கனக்கும் உன்னால் , கலகம் பிறந்ததுன்னால் , கடவுளும் ஆவதுன்னால் ஓங்கி ஹனுமன் உதயகிரி பிடிங்கிவர , வாங்கி இடது கையால் வைத்தவா, ஆபரணமனைத்து முன்னால்  அழகு மணித்தாலி உன்னால் , கோபரணச் செங்கோல் கொடுப்பதுன்னால் , யாளி பரியேறிவரும் காளி வரம் பெற்ற கண்ணாளா !!! ”

பாடலின் வரிகளை சற்று ஆழ்ந்து படித்தால் அர்த்தம் புரியும்….

இலங்கைக்கு கடலைத்தாண்டிச் செல்ல அணைப்பாலம் கட்டிகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் வேலையெல்லாம் முடித்த பின்னர் விஸ்வகர்மாவும் , ஆஞ்சநேயரும் நீராடச் சென்றார்கள்.

விஸ்வகர்மா தனது குண்டலங்களை கழற்றி ஒரு மரத்தின் அடியில் வைத்தார். இருவரும் நீராடி முடிந்ததும் விஸ்வகர்மா மறந்து விட்டது போல இருப்பிடத்துக்கு வந்துவிட்டார். பின்னர் ஹனுமனிடம் அந்த குண்டலங்களை எடுத்து கொண்டு வரும்படி சொன்னார்.

ஹனுமன் சென்று அவற்றை எடுக்க , அவராலும் முடியவில்லை. பல மலைகளையும், மரங்களையும் வேருடன் பிடுங்கி கொண்டு வந்த ஹனுமனால் விஸ்வகர்மாவின் குண்டலங்களை அசைக்க கூட முடியவில்லை. அதனால் அவர் தன் இயலாமையை குறித்து யோசிக்க , பூர்வ ஞானத்தால் தான் தனது தாயின் வயிற்றில் சிசுவாக இருந்த போது நடந்த விஷயங்கள் நினைவுக்கு வர , பூர்வத்தில் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வர அருள்புரிந்த ஆதிவிஸ்வகர்மாவுக்கும் , இப்போது இங்கே இருக்கும் நளவிஸ்வகர்மாவுக்கும் எந்த பேதமும் இல்லையென்பதை உணர்ந்து , வெட்கப்பட்டு நளவிஸ்வகர்மாவை வணங்கி வந்தனம் செய்தார்…..

ஆதார நூல் ::- ஆந்திர உத்தர ராமாயணத்தில் பஞ்சமாஸ்வாசம் 130ம் பத்தியத்திலும் , கம்பராமாயணம் உத்திரகாண்டம் ஹனுமப்படலம் 38 வது செய்யுளிலும் , விஸ்வப்ரம்ம புராணம் பஞ்சகிருத்திய காண்டம் 6 ம் செய்யுளிலும், மாந்தைப்பள் என்னும் நூல்களிலும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது….

Sethu meant Bridge. Bhandhanam means construction. The Sethu Bhandhanam finished within 3 days, some say 5 days but 3 days time is right. Nalan constructed the Bridge called Sethu Bhandhanam. Bhagavsn who was enraged at the disrespect shown by the Sumudra Rajan
aimed the agneyastram to dry up the oceans of the world, but once the king sought Saranagati at His feet, He gave him abhayam and became calm and tranquil like an ocean after storm. Varunan disrespected Sri Rama and did not come on prayers. Sri Rama got angry and began to aim and thereby Varuni rushed and requested Rama not to get anger. Then Varunan came and surrendered Sri Rama. After Varunan’s Saranagati, Samudra Rajan said “sethubandhanam seyya en muthukidam thanthen” thereby agreeing to have the bridge built on the water.

Immediately Sri Raman summoned Nalan, a vanara who was the son of Viswakarma the divine architect and commissioned him to build the bridge. The Nala Sethu that was constructed by the Vanaras under the guidance of Nala has been eulogised thus by Swami Desikan in his Sri RaghuvIra Gadyam says that the vanaras excited at the prospect of a glorious war with the famous rakshasas, constructed the bridge by lifting huge boulders and casting them on the waters of the Ocean, with such ease as if they were made of sponge. The Bridge thus constructed, gave the appearance of the clear parting of hair (vagidu – vkid) to the waters of the ocean.

The same scene is described in Srimad Ramayanam as :

“kIsarasAntaropahrtagirinikarai: setumadhapya”
(kIzrazaNtraepaùtigirinkrE> setumaxaPy).

Sage VAlmIki has written that the entire bridge measuring 100 yojanas (an ancient vedic unit of meaurement) in length and 10 yojanas in width was built in five days by Vanaras using huge hills. The Ramayana slokas pertaining to this are as follows:

“sa vanara vara: Sriman visvakarmatmajo bali||

babandha sagare setum yatha casya pita tatha|

sa nalena krta: setu: sagare makaralaye||”

In the Yuddha kandam of Srimad Ramayanam the above scene is described and followed by the details of how devas, rishIs, charanas and siddhars rushed to Sethukkarai to perform puja and
abhishekams with divya theerthams to Sri Raghuveeran who had achieved the impossible by
building a solid bridge over moving waters. They praised Him as “Sethu Raman” in recognition of His
monumental feat.

நன்றி நண்பர்களே, ஜெய் விஸ்வகர்மா…..

Thanks With Regards

Mahesh Acharya

http://www.facebook.com/MaheshAchaarya

வேளாள புராணத்தில் விஸ்வகர்மா(VISWAKARMA)

விஸ்வப்ராமணர்கள் அனைவருக்கும் இனிய  வணக்கத்துடன் ப்ரம்ம ஸ்ரீ மகேஷ் ஆச்சாரியா…..

———வேளாள புராணத்தில் விஸ்வகர்மா————–

வேளாளர்களின் வரலாற்று புராணத்தில் ” மயன் உடன் படு படலம்” எனும் பகுதி 30 செய்யுள்களை கொண்டதாக இயற்றப்பட்டுள்ளது. செய்யுள் கிடைக்கப்பெறவில்லை. அதன் சுருக்கத்தை பற்றி மட்டும் பார்ப்போம்…………..

ஒரு சமயம் இந்திரன் தனது சபையில் ” பசியைப் போக்கும் உணவு இல்லையேல் உலகம் இல்லை.அந்த உணவை உண்டாக்கும் தொழிலை செய்கிற உழவன் இல்லாவிட்டால் மற்ற தொழில்கள் எல்லாம் பயனற்று போகும்.எனவே உழூ தொழிலை விட உயர்ந்த தொழில் ஏதேனும் உண்டென்றால் யார் வேண்டுமானால் அதனை பற்றி சொல்லலாம் ” என்று கூறினார் .

அதை கேட்டு துடித்தெழுந்த மயன் ” ஐந்தொழிலுக்கு எதிர் உண்டோ” என்று கூறி மேலும் பின்வருமாறு கூறியதாவது ::-

” திருமால், சிவபெருமான், முருகன் ஆகியோருக்கு முறையே சக்கரம், சூலம், வேல் முதலியவற்றையும், அம்பு, வில், வாள், வெட்டும் கருவி, கோடாலி, கத்தரி, கதவு, கால்சிலம்பு, வீடு, வாசல், அடுக்களை, மற்றும் எல்லா இடங்களிலும் தேவைப்படும் எல்லா கருவிகளும் ஐந்தொழிலாளர் செய்ததே.

நாங்கள் செய்த தாலி இல்லையேல் மனைவி, கணவன் , மக்கள் ஏது? வாழ்க்கை தான் ஏது? நாங்கள் இல்லையேல் தேர்வர்களுக்கும், மூவர்களுக்கும்(சிவன், ப்ரம்மா, விஷ்ணு) வாழ்வுதான் ஏது ?

உணவினை விளைவிக்கும் கருவிகளை செய்து கொடுக்கும், எங்களை விட மேலானவர்கள் யாருமில்லை என்று கூறினார்…………

அதற்கு தேவேந்திரன் பயந்து ” உங்கள் தொழிலை சிறப்புடையதன்று என நான் கூறவில்லை . உழு தொழில் இல்லையேல் பஞ்சம் உண்டாகும். ஆகையால் நீங்கள் செய்யும் கருவிகளை உழு தொழில் செய்யும் வேளாளர்க்கு வழங்குக ” என்று கூறி , ஐந்தொழில்களைப்பற்றி மயன் சொன்ன புகழ்ச்சியெல்லாம் என் புகழ்ச்சியே என்று தேவேந்திரன் கூறினார் பின்னர் தேவர்கள் அனைவரும் உழவனுக்கு ஒரு வீடு கட்டி கொடு என்று கூறியதற்கிணங்க மயனும் உழவனுக்கு ஒரு பெரிய வீடு ஒன்றை உருவாக்கி கொடுத்தார்.

இந்த தகவல்கள் வேளாள புராணம்” மயன் உடன்படு படலம்” என்னும் செய்யுள் வடிவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.. …….

நன்றி::- வேளாள புராணம் .

நன்றி நண்பர்களே , ஜெய் விஸ்வகர்மா…

Thanks With Regards

Mahesh Acharya

http://www.facebook.com/MaheshAchaarya

சுப்ரதீபக்கவிராயர் (VISWAKARMA)

விஸ்வப்ராமணர்கள் அனைவருக்கும் இனிய வணக்கத்துடன் ப்ரம்ம ஸ்ரீ மகேஷ் ஆச்சாரியா

விஸ்வகர்ம கவிஞர்கள் மயன், ஐயம்பெருமாள் சிவந்த கவிராயர், வீரகவிராயர் , மாம்பழ கவிச்சிங்க நாவலர், முத்துச்சாமி பாரதியார், முத்துவீரிய பாண்டியர் , வைத்திலிங்க புத்தர், மதுரகவி முத்துகிருஷ்ண ராமானுஜ கவிராயர், பொன்னுச்சாமி புலவர், கவிவேங்கடச கர்த்தா, திருமலை கொழுந்து கவிராயர் ….

இவர்களின் வரிசையில் இன்று நாம் காணப்போவது ” சுப்ரதீபக்கவிராயர் ”

” பெஸ்கி “என்னும் இத்தாலியர் தேமதுரத் தமிழின் மீது தீராத காதல் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்தவர்

பன்மொழி புலமையுடைய அவர் தமிழ் இலக்கிய நயங்களை தெரிந்து கொள்ள அப்போது பழனியில் இருந்த சுப்ரதீபக்கவிராயரை கவிராயரை ஆசிரியராக ஏற்றுக்கொண்டார்…

சுப்ரதீபக்கவிராயர் 18 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை  மாவட்டம் திருமங்கலம்  வட்டத்தில் பிறந்த மனு விஸ்வகர்மா.. இவர் இலக்கிய, இலக்கண கடலில் கரை கண்டவர் …

தமிழில் வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட “சதுர அகராதி ” யை சுப்ரதீபக்கவிராயர் தான் தொகுத்து கொடுத்தவர்…

” தேம்பாவணி” எனும் நூலை கவிராயர் உதவியுடன் வீரமாமுனிவர் இயற்றியதாக ” போப் ஆண்டவர்” கூறியுள்ளார்..
( தொன்னூல் விளக்கம் 9 ம் பக்கம் )

17 ம் நூற்றாண்டில் நிலக்கோட்டை என்னும் ஊரை ஆண்ட கூளப்பநாயக்கன்  என்பவர் மீது இவர் “கூளப்பநாயக்கன் காதல்” என்னும் நூலை இயற்றினார்…
காதல் இலக்கியத்தின் முன்னோடியாக இன்றும் இந்த  கருதப்படுகிறது.

” விரலிவிடுதூது ” எனும் நூலையும் இயற்றியுள்ளார்…

மறைந்த கவியரசு கண்ணதாசன் அவர்கள் மேலே குறிப்பிட்ட நூல்களின் மேல் மிக்க ஈடுபாடு கொண்டு அவற்றை தம் கவிநயத்திற்கு வழி காட்டியாக கொண்டிருந்தார்….

கவியரசு கண்ணதாசன் அவர்கள் சுப்ரதீபக்கவிராயர் அவர்களை பற்றி கூறிய கூற்றை பாருங்கள்
” விஸ்வகர்ம ” வகுப்பில் பிறந்த சுப்ரதீபக்கவிராயர் உவமை நயத்தில் இவருக்கு ஈடாக கம்பனை மட்டுமே சொல்லமுடியும் ..

இவர் இயற்றிய விரலிவிடுதூது, கூளப்பநாயக்கன் காதலிலும் எனக்கு 35 ஆண்டுகளாக ஈடுபாடு உண்டு..
“திரை ஒலி ” பத்திரிகையில் வேலை பார்க்கும் போது இதில் பல பகுதிகளை நான் மனப்பாடம் செய்திருக்கிறேன். எனது கவிதை வளாகத்திற்கு இதுவும் ஒரு வழிகாட்டி ….

ஆதாரம் ::- கூளப்பநாயக்கன் காதல் பதிப்புரை பக்கம் 4 …..
” விஸ்வகர்ம வரலாறு” புத்தகத்தின் பக்கங்களிலிருந்தும்…

நன்றி நண்பர்களே , ஜெய் விஸ்வகர்மா…

Thanks With Regards
Mahesh Acharya

www.facebook.com/MaheshAchaarya

Need more details about our community , visit my blog

www.maheshacharyablog.wordpress.com